மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மொபைல் போன் தொலைந்து போனதாக பதியப்பட்ட புகார்களில் கடந்த ஒரு மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூபாய் 7,24,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் மட்டும்) மதிப்புள்ள 50 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவ பிரசாத், IPS., அவர்களால் 20.01.2023-ந் தேதி உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,36,59,850/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்) மதிப்புள்ள 977 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் பணம் பறித்த மோசடி வழக்குகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித
நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 3,00,850/- (ரூபாய் மூன்று இலட்சத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்)-மும், இதுவரை ரூபாய் 35,19,700/- (ரூபாய் முப்பத்தைந்து இலட்சத்து பத்தொன்பதாயிரத்து எழுநூறு மட்டும்) பணத்தை இழந்த நபர்களின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிகணக்கு எண், CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் Investment App -களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் loan App-களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் Video Call ஐ attend செய்ய வேண்டாம் என்றும் வங்கி கணக்கு விபரங்களை Update செய்யுமாறு வரும் link -களை Click செய்ய வேண்டாம். Remote access App களான Anydesk, teamviewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
செல்வராஜ்,மதுரை.