தேனி TO மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள பங்களாமேடு பேருந்து நிறுத்தப் பகுதியில் காலை, மாலை என சுமார் 3000மாணவ, மாணவிகள் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றன இந்த பகுதியில் கொண்டு ராஜா உயர்நிலைப்பள்ளி, கம்மவர் சங்க மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி சர்ச் உயர்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் தேனி நகரம் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும் இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS. அவர்களின் அறிவுறுத்தலின் படி போக்குவரத்து காவல் ஆய்வாளர்
தட்சணாமூர்த்தி அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு இன்று முதலாவதாக பங்களாமேடு பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதியும் விபத்துக்களை தவிர்க்கும் விதத்திலும் இன்று மாலை பள்ளி முடிவடைந்த நேரத்தில் சாலையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் அமைத்து நகர பேருந்துகள், மினி பேருந்துகள், ஆட்டோகள் பொதுமக்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவண்ணம் வாகனங்கள் செல்வதற்கு சக காவலர்களுடன் சுமார் 2 மணிநேரம் களப்பணியில் ஈடுபட்டார் இப்பணியை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி அவர்களை வெகுவாக பார்ட்டி வருகின்றன மேலும் தேனி நகர் பகுதி முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தில்லா தேனியாக மாற்றி வருகின்றார்.
செல்வம், தேனி.